Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கிழவன்… போக்சோவில் தூக்கிய போலீஸ்..!!

நாகர்கோவில் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்துள்ள ஆசாரிபள்ளம் பகுதியைச் சேர்ந்த முதியவர்  ஜெயினுலாபுதீன்.. இவருக்கு வயது 69.. இந்த முதியவர் அதே பகுதியைச் சேர்ந்த யு.கே.ஜி. படித்து வரும் 5 வயதுடைய சிறுமியை சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசையாகப்பேசி, அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் முதியவர்.. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போட்டு கத்தியுள்ளார்.. இந்த அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனால் பொதுமக்களிடம் கையும் களவுமாக சிக்கிக்கொண்டார் அந்த முதியவர்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் இதுபற்றி நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் பேரில் ஜெயினுலாபுதீன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Categories

Tech |