அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த 11 மாடி கட்டடம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருக்கும் டல்லாஸ் நகரின் 11 மாடிகளை கொண்ட உயரமான கட்டடம் திடீரென சாய்ந்தவாறு எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வந்தது.
இதையடுத்து அந்த கட்டடம் கடந்த 17 ஆம் தேதி (திங்கள் கிழமை) வெடி வைத்து தகர்க்கப்பட்டதில் சரிந்து விழுந்து மண் குவியலாக காட்சியளிக்கிறது.
முன்னதாக சரிந்து நின்ற அந்த கட்டடத்தை வைத்து அங்குள்ள மக்கள் பலரும் செல்பி எடுத்தனர். மேலும் சரிந்ததை தம் கைகளால் தூக்கி நிறுத்த முயற்சிப்பது போன்று பலரும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். தற்போது தகர்க்கப்பட்டுள்ளதால் இனி போட்டோஸ் எடுக்க முடியாது.
கட்டடத்தை தகர்க்க வெடி வைத்ததில் யாருக்கும் காயமில்லை. 2 வாரங்களாகவே அதனை தகர்த்து விட வேண்டும் என முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதனிடையே உயரமான கிரேன் மூலமாக அதை இடிக்க முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை.
இறுதியாக வெடி வைக்கப்பட்டு அந்த 11 மாடிக் கட்டடம் தகர்க்கப்பட்டு தூள் தூளாக சிதறி கிடக்கின்றன. இனி மக்கள் யாரும் அச்சப்படமாட்டார்கள்.
மேலும் உடைந்து தரைமட்டமாக கிடக்கும் இடிபாடுகளை அகற்றுவதற்கு 2 வார காலம் ஆகலாம் என்று கட்டுமான நிறுவனத்தினர் தெரிவித்தனர்.