Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரம் அருகே ஆம்னி பஸ் விபத்தில் சிக்கி பெண் பலி…!!

திண்டிவன சாலையில்  நின்று கொண்டிருந்த பெண் மீது ஆம்னி  பஸ் மோதியதில்  பரிதாபமாக உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் புதுவை பகுதியை சேர்ந்தவர் மாலதி. இவரது  மகன் கேரள மாநிலதில் வேலை பார்த்து வருகிறார். மாலதி அவரது மகனை பார்க்க செல்வதற்காக  பஸ்சில் டிக்கெட் முன்பதிவு செய்தார். இதற்காக இரவு புதுவையில் இருந்து திண்டிவனத்துக்கு வந்த மாலதி  திண்டிவனம்-சென்னை நெடுஞ்சாலையில் பஸ்சுக்காக காத்திருந்தார். 

இந்நிலையில் அந்த வழியாக வந்த ஆம்னி பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த மாலதி மீது  மோதியது. இதில் மாலதி சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த அப்பகுதி போலீசார் மாலதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

Categories

Tech |