Categories
மாநில செய்திகள்

அதே மின் கட்டணத்தை செலுத்துவது வீடுகளுக்கு சரி… ஆனால் வணிகர்களுக்கு சிரமம்… டிடிவி தினகரன் டுவிட்!

அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் பணப்புழக்கம் இல்லாத வணிகர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் சிரமத்தை தரும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவத்தொடங்கியதன் காரணமாக மார்ச் மாதத்திற்கான மின் பயன்பாடு கணக்கெடுக்கும் பணியில் ஊழியர்கள் யாருமே ஈடுபடுத்தப்படவில்லை. ஆகவே முந்தைய மாத கட்டணத்தையே (ஜனவரி – பிப்ரவரி) செலுத்துமாறு மின் வாரியம் அறிவுறுத்தியது. இவ்வாறு செலுத்திய கட்டணம், பின்வரும் மாத கணக்கீட்டு மின் கட்டணத்தில் சரிசெய்யப்படும் என்றும் கூறியிருந்தது.

ஆனாலும் மின்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று  பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்த நிலையில், போன  மாத கட்டணத்தை செலுத்துமாறு  கூறியதால் மக்கள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும் மின்கட்டணம் செலுத்துவதற்கு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும், தாமத கட்டணம், அபராதம் மற்றும் மறு இணைப்பு கட்டணம் போன்ற கட்டணங்களை வசூலிக்க கூடாது என்றும் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் பணப்புழக்கம் இல்லாத வணிகர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் சிரமத்தை தரும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கடந்த முறை செலுத்திய அதே மின்கட்டணத்தை இந்த முறையும் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டிருப்பது வீடுகளுக்கு சரியாக இருக்கலாம். ஆனால் 15 நாட்களுக்கும் மேலாக சிறு குறுதொழிற்சாலைகள், வணிகநிறுவனங்கள் மற்றும் கடைகள் மூடப்பட்டிருப்பதால் பணப்புழக்கம் இல்லாத வணிகர்களுக்கு இது சிரமத்தை தரும். எனவே வணிகரீதியான மின் இணைப்புகளுக்கு கட்டணத்தொகை மற்றும் கால அவகாசத்தில் உரிய சலுகை வழங்கும்படி தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார் .

Categories

Tech |