இந்த வழக்கு நடந்து கொண்டு இருக்கும் போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது . இதையடுத்து சின்னம் தொடார்பான தீர்ப்பு வர தாமதமான சூழலில் தேர்தலில் போட்டியிட குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டுமென்று TTV தினகரன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்ற போது பதிவு செய்யப்படாத கட்சிக்கு பொதுச் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இதற்கான உரிய சட்ட விதிகள் குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று காலை 10 மணிக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் முன்பு விசாரணைக்கு வந்தது . அப்போது அமமுக பதிவு செய்யப்பட்ட கட்சியா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார் . தினகரன் தரப்பு வழக்கறிஞ்சர் கட்சியை இன்றே பதிவு செய்தால் குக்கர் சின்னத்தை வழங்க வேண்டும் அல்லது ஏதேனும் பொதுச்சின்னம் வழங்க வேண்டும் என்று தனது வைத்ததை முன் வைத்தார். இதற்க்கு தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து அமமுக இன்றே பதிவு செய்தாலும் குக்கர் அல்லது பொதுச்சின்னத்தை ஒதுக்க முடியாது. கட்சியை இன்றே பதிவு செய்தாலும் சின்னம் ஒதுக்க 30 நாட்கள் ஆகும் . TTV தினகரனுக்கு தனிச்சின்னம் தான் வழங்க முடியும் குக்கர் சின்னம் வழங்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க முடியாது என்று கூறி TTV தினகரன் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.