ராஜஸ்தானில் மதுபான கடையை பெண் ஒருவர் 510 கோடிக்கு ஏலம் எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் மாவட்டத்தைச் சேர்ந்த நோஹார் கிராமத்தில் உள்ள மதுக்கடையை மாநில அரசு ஆன்லைன் மூலம் இந்த ஆண்டு ஏல முறையில் கொடுக்க முடிவெடுத்தததுள்ளது. மதுக்கடையின் ஏலம் காலை சுமார் 11 மணி அளவில் ரூ .72 லட்சம் ஆரம்ப விலையில் தொடங்கியது. அதன்பிறகு நீடித்துக் கொண்டே இருந்த ஏலம் ரூ 510 கோடி ரூபாய்க்கு இறுதியாக நள்ளிரவில் ஏலம் எடுக்கப்பட்டது.
மேலும் இரு குடும்பங்களுக்கு இடையே உள்ள கௌரவப் பிரச்சனையால் ஒரு சிறிய கிராமத்தில் உள்ள மதுக்கடையை ரூ 510 கோடிக்கு ஏலம் எடுத்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு இந்த மதுக்கடை லாட்டரி முறையின்படி வெறும் ரூ 65 லட்சத்திற்கு மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டது .தற்போது இந்த மதுக்கடையை போட்டிபோட்டு ஏலத்திற்கு எடுத்தவர்கள் கிரண் கன்வார் மற்றும் பிரியங்கா கன்வார் என்ற இரண்டு பெண்கள் மாறி மாறி ஏலம் கேட்டதில் இறுதியாக கிரண் கன்வார் ரூ 510 கோடிக்கு இறுதியாக ஏலத்தை முடித்து வைத்தார்.
மதுக்கடையை ஏலம் விட முடிவு எடுத்த மாநில அரசும் காவல் அதிகாரியும் எதிர்பார்க்காத அளவிற்கு மது காடையின் ஆரம்ப விலை ரூ 72 லட்சத்திலிருந்து 708 மடங்கை விட அதிகமாக ஏலம் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய மதுபான கடை உரிமையாளர்கள் ஏலம் எடுத்ததிலிருந்து 2 சதவீத பணத்தை முன்கூட்டியே செலுத்த வேண்டும் அப்பொழுதுதான் ஏலம் உறுதி செய்யப்படும் இல்லையேனெனில் ஏலம் ரத்து செய்யபடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்