Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ…. இவ்வளவு பெருசா?…. பூஜை போட்டு அனைவரையும் கலங்கடித்த காளி பக்தர்கள்….!!!!

கொல்கத்தா மாநிலத்தில் ஆண்டுதோறும்  அக்டோபர் மாதம் துர்கா பூஜை  கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது பந்தல்கள் அமைத்து பல்வேறு விதவிதமான காளியம்மன்  சிலைகளை வைத்து பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடமும் துர்கா பூஜை கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டு மிகவும் வித்தியாசமான முறையில் பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதாவது பெரிய சைஸ் ஆதார் கார்டு உருவாக்கி அதற்கு பக்தர்கள் காளி பூஜை செய்து வருகின்றனர்.

அந்த ஆதார் கார்டில் பெயர் காளி மற்றும் கணவர் பெயர் மகாதேவ் என்று சிவபெருமான் பெயரில் உள்ளது. மேலும் அதில் பிறந்தநாள் என்று 1.1.4404, முகவரி கைலாஷ் பர்பத் டாப் புளோர் மானசரோவர் ஏரி அருகே மற்றும் பின்கோடு 0000001 என்று உள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆதார் நம்பர் போன்ற அனைத்து விவரங்களும் அந்த ஆதார் கார்டில் உள்ளது. அந்த ஆதார் கார்டில் உள்ள ஆதாரம் உண்மையானதா அல்லது கற்பனையா என்று தெரியவில்லை.

மேலும் அந்த ஆதார் கார்டில் அரசின் முத்திரை அச்சு அசல் கார்டு போலவே இருக்கிறது. இந்த வித்யாசமான ஆதார் கார்டு காளி பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.இந்த கார்டில் உள்ள எண்ணிற்கு மெசேஜ் செய்தால் உங்களுக்கு ஓடிபி வரும். அதில் உங்கள் கோரிக்கை நிறைவேறியதா அல்லது நிறைவேறவில்லையா என்பதை காளி உங்களிடம் சொல்வார் என்று கிண்டல் செய்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் இதனைப்போலவே பலர் கல்யாண பத்திரிக்கை உள்ளிட்டவற்றை அடித்து வருகிறார்கள் என்றும் கேலி செய்துள்ளனர்.

Categories

Tech |