Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“அம்மா கொஞ்சம் நில்லுங்க” கூலித் தொழிலாளியின் செயல்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

பெண்ணைத் தாக்கி நகை மற்றும் பணத்தை திருடி சென்ற தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்ததோடு தங்க நகையை மீட்டு ஒப்படைத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அண்ணா புது தெரு பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு காளியம்மாள் என்ற மனைவி இருக்கின்றார். கடந்த சில தினங்களுக்கு முன்பு காளியம்மாள் தனது தங்கையை பார்ப்பதற்கு நடராஜ புரத்திற்கு சென்று அங்கேயே தங்கி விட்டார்.  . இந்நிலையில் காளியம்மாள் தனது தங்கையிடம் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று வருவதாக கூறி விட்டு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியில் மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று காளியம்மாளை அம்மா கொஞ்சம் நில்லுங்கள் என்று கூறி நிறுத்தியுள்ளார். இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்கிய மர்ம நபர் திடீரென காளியம்மாளை தாக்கிவிட்டு அவர் கையில் இருந்த பையை திருடி சென்று விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த காளியம்மாள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் பையில் 2 பவுன் தங்க நகை, ஏ.டி.எம். கார்டு, ரூபாய்3,000 பணம் மற்றும் செல்போன் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் காந்திநகர் பகுதியில் வசிக்கும்  சண்முக பாண்டி என்பவர் காளியம்மாளை தாக்கிவிட்டு அவரிடமிருந்த பையை திருடி சென்றதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனால் காவல்துறையினர் சண்முக பாண்டியை உடனடியாக கைது செய்து அவர் திருடிய காளியம்மாளின் பணம் மற்றும் தங்க நகையை மீட்டு அவரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Categories

Tech |