Categories
அரசியல்

பா.ஜ.கவிற்கு வாக்களியுங்கள்…. உத்திரப்பிரதேசத்தை நம்பர் 1-ஆக மாற்றுவோம்…. அமித்ஷா பேச்சு…!!!

உத்திர பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை அறிவிக்கப்பட்டிருப்பதால் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா ஒவ்வொரு வீடாக சென்று மக்களை சந்தித்திருக்கிறார்.

சட்டசபை தேர்தல் நடக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா மீண்டும் பயணித்து வருகிறார். அப்போது ஒவ்வொரு வீடாகச் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பேசியதாவது, ரஷ்ட்ரிய லோக்தள் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணி அமைத்திருப்பது பற்றி விமர்சனம் செய்தார்.

சமாஜ்வாதியின் தலைவரான அகிலேஷ் யாதவும், ரஷ்ட்ரிய லோக்தள் கட்சியின் தலைவரான,  ஜெயந்த் சவுத்ரியும் வாக்குகள் எண்ணப்படும் வரை தான் இணைந்து இருப்பார்கள். நீங்கள் வாக்களிப்பதில் தவறு செய்யும் பட்சத்தில், லக்னோவில் வன்முறையாளர்கள் ஆட்சிக்கு வந்துவிடுவார்கள்.

அவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால், மீண்டும் மாஃபியா ராஜ்யமும், சாதிவெறியும் தான் வரும். பா.ஜ.க கட்சிக்கு வாக்களித்தால், உத்தரபிரதேச மாநிலத்தை நம்பர்-1 ஆக மாற்றுவோம் என்று பேசியிருக்கிறார்.

Categories

Tech |