உசிலம்பட்டியில் அதிமுகவினரின் வைத்திருந்த பேனர்களை அமமுகவினர் கிழித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பார்வட் ப்ளாக் கட்சியின் மறைந்த மாநில பொதுச்செயலாளர் பி.கே.மூக்கையாத் தேவருக்கு 97_ஆவது பிறந்த தினத்தையொட்டி உசிலம்பட்டியில் உள்ள அவரின் நினைவிடத்தில் அமமுகவை சேர்ந்த தங்கத்தமிழ்செல்வன் மரியாதை செலுத்தினார். அப்போது அங்கு அதிமுகவினரின் பேனர்கள் இருந்தனர். இதையடுத்து தேர்தல் நேரத்தில் அதிமுகவினர் பேனர் வைத்ததை கண்டித்து, அமமுகவினர் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கே பெரும் பரபராப்பு ஏற்படது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த முயர்ன்றனர். அப்போது இரு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அமமுக அங்கு வைத்திருந்த பேனர்களை கிழித்துதெறிந்தனர். மேலும் தேர்தல் நேரங்களில் விதிகளை மீறி வரும் அதிமுகவினரை போலீசார் கண்டுகொள்வதில்லை என்றும் அமமுகவினர் குற்றம்சாட்டினர்.