Categories
இந்திய சினிமா சினிமா

சன்னி லியோன் வீட்டருகே புதிய வீடு வாங்கிய அமிதாப் பச்சன்…. எத்தனை லட்சம் தெரியுமா….?

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் வீட்டருகே புதிய வீடு ஒன்று வாங்கியுள்ளார்.

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். இவர் மும்பை ஜூகுவில் உள்ள ஜல்சா பங்களா வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் அமிதாப் பச்சன் அந்தேரி மேற்கு ஓஷிவாராவில் உள்ள அட்லாண்டிஸ் என்ற இடத்தில் 34 அடுக்குமாடி சொகுசு கட்டிடத்தில் புதிதாக ஒரு வீடு ஒன்று வாகியுள்ளார்.

இவருக்கு ஏற்கனவே நான்கு பங்களா வீடுகள் இருக்கும் நிலையில் 31 லட்சம் கொடுத்து தற்போது புதிதாக வாங்கியுள்ள இந்த பங்களா அவரது ஐந்தாவது வீடாகும். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டை பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோனும் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |