Categories
அரசியல் மாநில செய்திகள்

புகழ்ந்து பேசிய அமித் ஷா…. நெகிழ்ந்து போன முதல்வர்….!!

சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழக அரசை புகழ்ந்து பேசியதை கண்ட முதல்வர் நெகிழ்ந்து போனார்.

சென்னை கலைவாணர் அரங்கில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டின் முதலமைச்சர், துணை முதலமைச்சர் இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். அவர்கள் கொரோனாவுக்கு எதிராக மிகுந்த வெற்றிகரமான ஒரு போராட்டத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். நாடு முழுவதும் இருக்கும் குணம் அடைவோர் விகிதத்தை விட தமிழ்நாட்டில் குணமடைவர் விகிதம் சிறப்பானதாக இருக்கிறது, இது பாராட்டுக்குரியது.

இந்த கொரோனா காலகட்டத்தில் என்னுடைய துறையானது அனைத்தையும் ஒருங்கிணைக்க கூடிய ஏஜன்ஸி ஆக செயல்பட்டு கொண்டிருக்கின்றது. பல மாநில முதல்வர்கள், அதிகாரிகள் என்னுடன் பேசும்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகள் அறிவியல்பூர்வமாக மிகச்சிறப்பாக தரவுகளை அளிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் அதை சிறப்பாக கையாண்டு வருகிறார்கள் என தெரிவித்தார்கள்.

நாடு முழுவதிலும் குறிப்பாக இந்த காலகட்டத்திலேயே கர்ப்பிணி பெண்கள் மற்றும் புதிதாக பிறந்த சிசுக்களின் பராமரிப்பு தமிழ்நாட்டைப் போல எந்த ஒரு மாநிலத்திலும் இவ்வளவு சிறப்பாக அளிக்கப்படவில்லை. கொரோனா காலத்தில் மட்டுமல்ல  அனைத்து நேரங்களிலும் இதே ஒரு பிரகாசமான, ஒரு ஆக்கபூர்வமான, ஒரு நிலைதான் நிலவுகிறது. குறிப்பாக கடந்த 7 ஆண்டுகளில் நரேந்திர மோடி அவர்களுடைய ஆட்சியிலேயே இதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

மாநிலங்களுக்கிடையே நல்லாட்சி என்ற ஒரு தகுதி அடிப்படையிலான போட்டி போட்டிகளில்  தமிழ்நாடு இந்த ஆண்டு முதல் நிலை வகிக்கிறது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன். நீர் பாதுகாப்பு, நீர் வினியோகம் ஆகிய இரண்டு துறைகளிலும் தமிழ்நாட்டுக்கு தான் இந்த ஆண்டு முதல் இடம் அளிக்கப்பட்டிருக்கிறது.

மாநிலங்களுக்கிடையேயான போட்டி நடப்பதை போல மாவட்டங்களுக்கு இடையேயான போட்டிகள் என்று வரும்போது தமிழ்நாட்டில் இரண்டு மாவட்டங்கள் முன்னணி இடங்கள் வகுக்கின்றன. ஒன்று வேலூர் மற்று ஒன்று கரூர்.

நாடு முழுவதிலும் இருக்கும் விவசாயிகளை பல தடைகள் கட்டுப்படுத்துகின்றன. அந்த தளைகளிலிருந்து விடுதலை அளிக்கும் வகையில் தான் இப்போது மோடி அரசு மூன்று வகையான சீர்திருத்தங்களை மேற்கொண்டு இருக்கின்றது. விவசாயிகளுக்கு விடுதலை அளிக்கக் கூடிய அந்த சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு பலத்த ஆதரவு கொடுத்து. இனி தமிழ்நாட்டில் இருக்கும் விவசாயிகளும் சிறப்பாக இருப்பார்கள் என தெரிவித்துக் கொள்கின்றேன் என அமித் ஷா தெரிவித்தார்.

Categories

Tech |