Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இந்த வருடம் எளிமையான முறை…. அம்மனுக்கு புறப்பாடு உற்சவம்…. கட்டுப்பாடு விதித்த தமிழக அரசு….!!

நரசிம்மர் கோவிலில் இருக்கும் அமிர்தவல்லி அம்மனுக்கு புறப்பாடு உற்சவம் எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நரசிம்மர் கோவிலில் இருக்கும் அமிர்தவல்லி தாயார் புறப்பாடு உற்சவம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அதிகாலை நேரத்தில் கோவில் நடை திறக்கப்பட்டு அமிர்தவள்ளி தாயாருக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் செய்து மலர் அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது.

இதனை அடுத்து மாலை நேரத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தங்க கேடயத்தில் எழுந்தருளி கோவிலின் பிரகாரத்தில் மங்கள வாத்தியங்களுடன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துள்ளார். இதனை தொடர்ந்து அம்மனுக்கு மகாதீபாராதனையும் நடைபெற்றுள்ளது. மேலும் அரசு அறிவித்த கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து பக்தர்கள் அனுமதி இன்றி எளிமையான முறையில் உற்சவம் நடைபெற்றுள்ளது.

Categories

Tech |