அமிர்த கேசரி
தேவையான பொருட்கள் :
ரவை – 250 கிராம்
நெய் – 150 மில்லி
கன்டன்ஸ்டு மில்க் – 50 மில்லி
பால் – 1 லிட்டர்
சர்க்கரை – 100 கிராம்
முந்திரி, திராட்சை – 25 கிராம்
ஏலக்காய் – 4
கிராம்பு – 3
டூட்டி ஃப்ரூட்டி – 1/2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு கடாயில் நெய் விட்டு முந்திரிப்பருப்பை வறுத்து வைக்கவும். பின் மிக்சியில் ஏலக்காய், கிராம்பு, சிறிது சர்க்கரை ஆகியவற்றை பொடியாக்கிக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் நெய் விட்டு ரவையைப் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும் .கடாயில் பாலை ஊற்றி அது கொதித்து வரும் போது ரவையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கிளறவும். ரவை வெந்து கொதி வரும்போது சர்க்கரையைச் சேர்த்து, ஏலக்காய் ,கிராம்புப் பொடி சேர்த்து கிளறி, இறுதியாக நெய் ஊற்றி இறக்கவும். பின்னர் பரிமாறும்போது கேசரியின் மேல் டூட்டி ஃப்ரூட்டி, கன்டன்ஸ்டு மில்க், நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்துப் பரிமாறவும். ஃ புட் கலர் விருப்பினால் சேர்க்கலாம் .