கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் அமீரகத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமீரகத்தில் பல பகுதிகளில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட முடிவில் 3579 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,77,955 ஆக அதிகரித்துள்ளது. தற்சமயம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 51 ஆயிரத்து 484 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக நேற்று மட்டும் 9 பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 792 ஆக உயர்ந்துள்ளது.
தற்சமயம் 26,679பேர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜனவரி 12ஆம் தேதி முதல்…. 13 வது நாளாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதனால் பொது மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. அமீரக சுகாதாரதுறை அமைச்சகம் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.