அமெரிக்கா அதிபர் ஜோ பைடனுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்துவிட்டதாக கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் 46வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார். அதிலும் அவர் பதவியேற்ற சமயத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக வேலையின்மை பொருளாதார வீழ்ச்சி போன்றவை முக்கிய பிரச்சினைகள் இருந்தன. இந்த நிலையில் அவர் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக மேற்கொண்டதன் மூலம் அது கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது.
இதனால் பதவிக்கு வந்த மூன்று மாதங்களில் சிறப்பாக செயல்பட்ட அதிபர் என்று மக்களிடம் அவருக்கு நன்மதிப்பு உயர்ந்தது. ஆனால் தற்போது எந்தவொரு அமெரிக்கா அதிபரும் சந்திக்காத பெரும் சரிவை பெற்றுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து பிரபல பத்திரிக்கை ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் வெளியான தகவலின் படி, சுமார் மூன்று மாதங்களில் ஜோ பைடனின் செல்வாக்கு 56%த்தில் இருந்து 44.7%மாக சரிந்தது.
குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் எந்தவொரு அமெரிக்கா அதிபரும் கண்டிராத சரிவை ஜோ பைடன் சந்தித்துள்ளார். ஏனெனில் ஜூலை மாத தொடக்கத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிப்பு மற்றும் குழப்பமான சூழலில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற்றம் போன்றவை இதற்கு காரணமாக கூறப்படுகின்றன.