கடலில் மிகவும் ஆழமான பகுதிக்கு சென்று வந்த முதல் பெண் என்ற சாதனையை அமெரிக்காவை சேர்ந்த கேத்தரின் படைத்துள்ளார்
அமெரிக்க நாட்டை சேர்ந்த கேத்ரின் 1984 ஆம் ஆண்டில் நாசா மூலமாக விண்வெளிக்கு சென்ற முதல் பெண்மணி ஆவார். இவர் நாசாவில் பணிபுரிந்த காலத்திலேயே மூன்று முறை விண்வெளிக்கு சென்று வந்துள்ளார். பிறகு தனது ஓய்வுக்கு பின்னர் கடல் மீது கொண்ட ஆர்வத்தினால் NOAA நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானியாக தனது பணியைத் தொடங்கினார்.
பசுபிக் பெருங்கடலின் ஆழமான மரியானா அகழியில் இருக்கும் செலஞ்சர் முனைக்கு சென்று படம் பிடிப்பதற்கு முடிவு செய்தார். இதற்காக ஐந்து பெருங்கடலில் இருக்கும் ஆழமான பகுதிகளை பார்வையிட நீர்மூழ்கிக் கப்பலான லிமிட்டிங் காரணி கப்பலில் பயணம் செய்தார். தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்து ஊர் திரும்பிய கேத்ரின் உலகின் ஆழமான பகுதிக்கு சென்று வந்த முதல் பெண் என்ற சாதனையை படைத்துள்ளார்.