Categories
உலக செய்திகள்

‘உங்கள் ஆதரவு வேண்டாம்’…. போர் விமானங்கள் அனுப்பும் சீனா…. எதிர்ப்பு தெரிவிக்கும் தைவான்….!!

கடற்பகுதியில் போர் விமானங்களை அமெரிக்கா நிலைநிறுத்தியுள்ளதற்கு தைவான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தைவானின் எல்லைப் பகுதியில் சீனா போர் விமானங்களை அனுப்பி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்த நடவடிக்கையானது கடந்த 72 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிகவும் மோசமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதாக தைவான் அதிபர் குற்றம் சாட்டியுள்ளார். அதிலும் அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் எங்கள் நாட்டை சீனா ஆக்கிரமிப்பு செய்யும் என்ற பயவுணர்வு ஏற்பட்டுள்ளது. இதனை தைவான் பாதுகாப்பு துறை அமைச்சரான சியு குவோ-வெங் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் முழு ஆதரவை அளிக்கும் விதமாக அமெரிக்காவும் கனடாவும் தைவான் கடற்பகுதியில் தங்களது போர்க் கப்பல்களை நிலைநிறுத்தி உள்ளன. இதற்கு தைவான் அரசு தற்போது கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்க-சீன ஒப்பந்தங்களின் அடிப்படையில் அமெரிக்கா அனைத்து விதிகளையும் சரியாக கடைபிடிக்க வேண்டும். அதிலும் அமெரிக்கா மற்றும் தைவானின் அதிகாரப்பூர்வமான ராணுவ தொடர்புகளையும் சீனாவின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம், என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |