Categories
உலக செய்திகள்

பயிற்சியாளருடன் மலர்ந்த காதல்… 3வது திருமணத்துக்கு தயாரான பாடகி…. வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்….!!

பிரபல பாப் பாடகி தனது நெடுநாள் நண்பரை காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் பிரபல பாப் பாடகியான  பிரிட்னி ஸ்பியர்ஸ்க்கு என்று தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் அவரின் குரலுக்கு இந்த உலகில் உள்ள அனைத்து மக்களும் அடிமை.  இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு பிரிட்னியின் தோழரான ஆலன் அலெக்சாண்டர் என்பவரை மணந்துள்ளார். ஆனால் இந்த திருமணத்தை நீதிமன்றம் சட்ட ரீதியாக செல்லாது என்று உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து கெவின் பெடர்லைன் என்பவரை 2-வது திருமணம் செய்தார். அவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இருப்பினும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கல்யாணமாகி மூன்றே ஆண்டுகளில் பிரிந்தனர். இதன் பின்னர் தற்பொழுது உடற்பயிற்சி பயிற்சியாளரும் நெடுநாள் நண்பருமான சாம் அஸ்காரி என்பவரை காதலித்து வந்தார். இந்த நிலையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. குறிப்பாக அவர்கள் இருவரும் மோதிரம் மாற்றிக் கொள்ளும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |