Categories
அரசியல் மாநில செய்திகள்

அமெரிக்காவின் கொள்கைகள்… “கட், பேஸ்ட், காப்பி”… கமலை வெளுத்து வாங்கிய எம்பி..!!

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் அரசியல் கட்சியின் கொள்கைகளை கமலஹாசன் காப்பியடித்து விட்டார் என்று விடுதலை சிறுத்தை கட்சியின் எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

கட்சியின் கொள்கை குறித்து மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலிடம் கேட்கப்பட்டது. கொள்கையை சொன்னால் பிற கட்சிகள் காப்பி அடித்து விடும் என்று அவர் கூறினார். இந்த நிலையில் கமல் கட்சியின் இணையதள பக்கத்தில் கொள்ளைகள் என குறிப்பிடப்பட்டிருக்கும் பாயிண்டுகள் அப்படியே அமெரிக்காவின் சென்டரிஸ்ட் கட்சியின் அப்பட்டமான காப்பி என்று விடுதலை சிறுத்தை கட்சியின் விழுப்புரம் தொகுதி எம்பி பேராசிரியர் ரவிக்குமார் கூறியுள்ளார்.

இது பற்றி மேலும் அவர் கூறியிருப்பதாவது, “கட்சி கொள்கையை வெளியே சொன்னால் காப்பி அடித்துவிடுவார்கள் என கமல்ஹாசன் கூறியிருக்கிறார். ஆனால் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் இணைய தளத்தில் மய்யவாதம் ( centrism) என்ற தலைப்பில் குறிப்பிடப்பட்டிருப்பவை அமெரிக்காவில் செயல்படும் அரசியல் கட்சியான The Centrist Party இன் கொள்கைகள் எனக் குறிபிடப்பட்டிருப்பவற்றின் அப்பட்டமான காப்பி.

The Centrist Party இன் இணைய தளத்திலிருந்து வரிக்கு வரி காப்பி அடித்திருக்கிறது மக்கள் நீதி மய்யம். Salient points about centrism from the CP perspective என்ற தலைப்பின் கீழ் தரப்பட்டிருக்கும் 3 பாய்ண்ட்டுகளையும் அப்படியே காப்பி எடுத்து centrism என்ற தலைப்பின் கீழ் தனது இணைய தளத்தில் வெளியிட்டிருக்கிறது கமல் கட்சி.
இப்படி காப்பி அடிப்பதற்கு தனக்கு மட்டுமே ‘ரைட்’ இருக்கிறது. அதுதான் ‘காப்பிரைட்’ என கமல் நினைத்துக்கொண்டிருக்கிறாரா? இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories

Tech |