ராணுவத்தை விமர்சனம் செய்தததற்காக பத்திரிக்கையாளருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்படும் என கூறப்படுகிறது.
அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளர் Danny Fenster. இவர் Frontier Myanmar ஆன்லைன் தளத்தின் நிர்வாக இயக்குனராக இருந்தார். இந்த நிலையில் மியான்மர் ராணுவ ஆட்சியை விமர்சித்து கட்டுரை எழுதியதாக Danny மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதனையடுத்து கடந்த மே மாதம் மியான்மர் ராணுவம் இவரை கைது செய்தது.
மேலும் குடியேற்ற சட்டத்தை மீறியதாக கூறி அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அவர் மீது தற்பொழுது தேசத்துரோகம் மற்றும் தீவிரவாதம் போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இதனால் அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.