Categories
உலக செய்திகள்

“அமைதியை பின்பற்றும் நாட்டுடன் இணைந்து செயல்பட தயார்!”.. அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேச்சு..!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், நடைபெற்ற ஐ.நா. பொதுசபையின் 76-வது கூட்டத்தில்,  கூட்டத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார்.
ஜோபைடன் பேசியிருப்பதாவது, நம் பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் சுதந்திரம் போன்றவை ஒன்றுடன் ஒன்று சேர்ந்தவை. இதற்கு முன், இல்லாத அளவிற்கு நாம் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம். நாம் தற்போது, தீவிரவாத அச்சுறுத்தல்களை சந்திக்கிறோம். ஆப்கானிஸ்தான் நாட்டின் 20 வருட பிரச்சினைக்கு நாம் தீர்வு கொண்டு வந்திருக்கிறோம்.
இதனை செய்த நாம், அந்நாட்டின் வெளியுறவுக்கொள்கை என்னும் கதவுகளையும்  திறந்திருக்கிறோம். ஆயுதங்களினால், கொரோனா தொற்றை வீழ்த்த முடியாது. அறிவியலாலும் அரசியல் சக்திகளாலும் தான் கொரோனாவை ஒழிக்க முடியும். சிகிச்சைக்கு தேவையான  வசதிகளை அதிகப்படுத்தி உலக மக்களை பாதுகாக்க வேண்டும்.
அமெரிக்க நாட்டின் இராணுவ சக்தி, எங்களது முதல் ஆயுதம் கிடையாது. இறுதியான ஆயுதம்.  அமைதியை, கடைபிடிக்கும் நாட்டுடன் சேர்ந்து பணிபுரிய அமெரிக்கா தயார் நிலையில் இருக்கிறது. நம் தோல்விகளினால், நாம் விளைவுகளை எதிர்கொண்டுள்ளோம். தற்போது, நாம் சிறந்த ஆயுதங்களுடனும், அதிக திறமையுடனும் இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |