Categories
உலக செய்திகள்

ரஷ்ய கப்பலை மூழ்கடிக்க…. ரகசியமாக உக்ரைன் நாட்டிற்கு உதவிய அமெரிக்கா…. வெளியான தகவல்…!!!

ரஷ்ய நாட்டின் மிகப்பெரிய போர்க்கப்பலை மூழ்கடிப்பதற்காக, உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா ரகசியமாக தகவல் அளித்து உதவியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ரஷ்ய நாட்டின் மாஸ்க்வா என்ற மிகப்பெரிய போர்க்கப்பல் கருங்கடலில் இருந்து கடல்வழி தாக்குதல் மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி அன்று அந்தக் கப்பல் தீப்பற்றி எரிந்து கடலில் மூழ்கி விட்டது. அந்த கப்பலை உக்ரைன் 2 நெப்டியூன் ஏவுகணைகள் மூலம் தாக்கி அழித்ததாக தெரிவித்தது.

இந்நிலையில், அமெரிக்காவின் ஒரு அதிகாரி, ரஷ்ய போர்க் கப்பலை மூழ்கடிப்பதற்காக அமெரிக்கா ரகசியமாக உக்ரைன் நாட்டிற்கு தகவல்கள் அனுப்பியதாக கூறியிருக்கிறார். ரஷ்ய நாட்டின் ஏவுகணைகளை தாங்கிச் செல்லக்கூடிய மாஸ்க்வா, கப்பல் இரண்டாம் உலகப் போருக்குப் பின் போரில் மூழ்கடிக்கப்பட்ட மிகப்பெரிதான போர்க்கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவின் இந்த கப்பலை தாக்கியழிக்க உக்ரைன் தனிப்பட்ட முறையில் திட்டமிட்டது என்றும் அந்தக் கப்பல்கள் இருக்கும் இடம் உட்பட பல உளவுத்துறை தகவல்களை மட்டும் அமெரிக்கா வழங்கியது என்றும் அந்த அதிகாரி கூறியிருக்கிறார்.

Categories

Tech |