அமெரிக்காவில் நேற்று திடீரென்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் சிறுமி உட்பட 3 அப்பாவி மக்கள் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருக்கும் டைம்ஸ் சதுக்கத்தில் நேற்று மாலையில் சுமார் ஐந்து மணிக்கு நான்கு நபர்களுக்கிடையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் மூவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாதிப்படைந்தவர்களுக்கு இதில் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றும் அதில் ஒரு நபர் தன் குடும்பத்தினருடன் குழந்தைகளுக்கு பொம்மைகள் வாங்குவதற்கு வந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட மூவருக்கும் கால்களில் காயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.