Categories
உலக செய்திகள்

இப்படி மட்டும் பண்ணாதீங்க ….! ”தினமும் 2,00,000 பாதிப்பு, 3000 மரணம்” மக்களுக்கு எச்சரிக்கை …!!

அமெரிக்காவில் ஜூன் ஒன்றிலிருந்து ஒரு நாளைக்கு 3000 பேர் தொற்றினால் இறக்கும் அபாயம் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது

வல்லரசு நாடான அமெரிக்கா, கண்ணுக்கு தெரியாத வைரசின் பிடியில் சிக்கி திணறி வருகின்றது. மற்ற  நாடுகளை விட அதிக பாதிப்பை அமெரிக்கா  தினமும் சந்திக்கிறது. கொரோனா தொற்றினால் ஏற்படும் உயிர்ப்பலி வேகமாக 70 ஆயிரம் என்ற எண்ணிக்கையை எட்ட போகின்றது. அமெரிக்காவில் ஊரடங்கு நடவடிக்கைகளை தளர்த்தி, பொருளாதார நடவடிக்கைகளை பல மாகாணங்களும் தொடங்கியுள்ளன. இந்நிலையில் அங்கு உள்நாட்டு அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. வெளியான அறிக்கையில், ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் உயிக்கொல்லியான கொரோனா தொற்றினால் தினமும் 3 ஆயிரம் பேர் இறப்பார்கள் என கணிக்கப்பட்டிருந்தது.

அதோடு நாள் ஒன்றுக்கு சுமார் 2 லட்சம் பேர் இந்த தொற்று தாக்குதலுக்கு ஆளாவார்கள் எனவும் சொல்லப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அமெரிக்க மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை , “கொரோனா தொற்றின் பாதிப்பு குறித்த புள்ளி விவரங்கள், புத்திசாலித்தனமான யதார்த்தத்தை சுட்டிக்காட்டியுள்ளது.  அதேநேரம் அமெரிக்கா பதுங்கி இருக்கின்றது. கடந்த 7 வாரத்தின் நிலைமையில் பெரிய அளவில் மாற்றம் ஒன்றும் இல்லை. பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் திறக்கப்படுவது நிலைமையை மேலும் மோசமானதாக்கும்” என கூறியுள்ளது.

அமெரிக்காவில் 12 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலாய் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு 3 கோடி அமெரிக்கர்கள்வேலை இல்லாமல், நிவாரணம் கேட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே உள்நாட்டின் வரைவு அறிக்கையை அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரண்டு சபைகளும், தேசிய தொற்றுநோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமும் நிராகரித்துள்ளது.

அதே சமயம் வரைவு அறிக்கையை தயார் செய்தவர், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் புளூம்பெர்க் சுகாதார கல்லூரியின் தொற்றுநோய் பேராசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் ஜஸ்டின் லெஸ்லர், தி வாஷிங்டன் போஸ்ட் நாளிதழிடம் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், “வரைவு அறிக்கை எவ்வாறு அதிகாரிகளினால் தளமாக மாற்றப்பட்டது, எப்படி செய்தி நிறுவனத்துடன் பகிரப்பட்டது என்பது எனக்கு தெரியவில்லை. அதே நேரம் கட்டுப்பாடுகளை இவ்வளவு விரைவாக தளர்த்துவது என்பது, நிலைமையை விரைவில் மோசமாக்கி விடும்” என குறிப்பிட்டார்.

வாஷிங்டன் வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஜட் டீரெ கருத்து தெரிவிக்கையில், “இந்த அறிக்கை, வெள்ளை மாளிகை ஆவணமோ, கொரோனா தொற்று பணி குழுவினரிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணமோ இல்லை . இந்த தகவல் பணிக்குழு அல்லது தகவல்களால் செய்யப்பட்ட எந்த மாதிரியையும் பிரதிபலிக்காது” என குறிப்பிட்டார். அதோடு “அமெரிக்க பொருளாதாரத்தை மீண்டும் திறப்பது என்பது விஞ்ஞான உந்துதல் அணுகுமுறை. இது கூட்டாட்சி உயர் சுகாதார மற்றும் தொற்றுநோய் நிபுணர்கள் ஒப்புக்கொண்டது. அமெரிக்க மக்களின் நலனில் அதிபர் டிரம்ப் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்கிறார்” என குறிப்பிட்டார்.

Categories

Tech |