அமெரிக்கா மற்றும் சீன நாடுகளுக்கு இடையில் கடும் மோதல் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் துணை வெளியுறவு துறை மந்திரியான, வெண்டி ஷெர்மன் 2 நாடுகளுக்கு இடையேயான உறவு தொடர்பான, பேச்சுவார்தைக்காக சீனா பயணிக்கிறார். அதாவது அமெரிக்க அதிபராக ஜோபைடன் பொறுப்பேற்ற ஆறு மாதங்களுக்கு பின் நாட்டின் முக்கிய பிரதிநிதி சீன நாட்டிற்கு பேச்சுவார்த்தைக்காக சென்றிருப்பது இதுதான் முதல் தடவையாகும்.
அமெரிக்கா மற்றும் சீன நாடுகளின் உறவுக்கு பொறுப்பு சீன நாட்டின் துணை வெளியுறவு மந்திரி ஸீ பெங் ஆவார். இவரிடமும் வெளியுறவு மந்திரி வாங் யி-யிடமும் அமெரிக்காவின் துணை வெளியுறவு துறை மந்திரி, தனித்தனியாக கலந்துரையாடவுள்ளார்.
இந்நிலையில், இரு நாட்டினருக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடங்கவுள்ள சமயத்தில், உறவில் விரிசல் ஏற்பட்டதற்கு அமெரிக்கா தான் காரணம் என்று சீனா குற்றம்சாட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சீனா, சரியான வழிகாட்டுதலின்றி ஆபத்தான கொள்கைகளை பின்பற்றுவதை அமெரிக்கா மாற்ற வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பில் துணை வெளியுறவு துறை மந்திரியான ஸீ பெங் தெரிவித்துள்ளதாவது, “அதிபர் ஜோ பைடன் அரசு, சீன நாட்டின் வளர்ச்சியை முன்னேறவிடாமல் தடுக்க முயன்று வருகிறது. மேலும் 2 நாடுகளுக்கு இடையேயான உறவில் கடும் பிரச்சனை ஏற்பட, அமெரிக்க மக்கள் சிலர் சீனாவை எதிரிகளாக கருதுவது தான் காரணம்” என்று தெரிவித்துள்ளார்.