பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து தெரிவித்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது அமெரிக்காவும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, நபிகள் நாயகம் பற்றி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல நாடுகளும் இதற்கு கடுமையாக எதிர்த்து தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. எனவே, சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக நுபுர் சர்மாவும் நவீன்குமார் ஜிண்டாலும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
இந்நிலையில், அமெரிக்க நாட்டின் வெளியுறவுத்துறையுடைய செய்தி தொடர்பாளராக இருக்கும் நெட் பிரைஸ், பாஜகவை சேர்ந்த இரண்டு பேர் தெரிவித்த கருத்து கண்டனம் தெரிவிக்கிறோம். இது தொடர்பில் பாஜக அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டதற்கு வரவேற்பு அளிக்கிறோம். மத சுதந்திரம் தொடர்பில் இந்தியாவுடன் பேச்சு வாரத்தை நடத்திக் ண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.