Categories
உலக செய்திகள்

கொரோனாவிலும் இந்திய பொருளாதாரம் வலிமையாக இருக்கிறது… வியந்து போன அமெரிக்கா…!!!

அமெரிக்க அரசு இந்தியாவில் கொரோனாவின் மூன்றாம் அலை பரவிய போதும் பொருளாதாரம் அதிக வலிமையுடன் இருப்பதாக கூறியிருக்கிறது.

அமெரிக்க நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்த சமயத்திலும் அந்நாட்டின் பொருளாதாரம் அதிக வலிமையுடன் இருக்கிறது. இந்த வருடத்தின் ஆரம்பத்தில் அங்கு ஒமிக்ரான் தொற்று தொடங்கியது.

எனினும் பலி எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. பொருளாதாரத்திலும் பாதிப்பில்லை என்று குறிப்பிட்டிருக்கிறது. மேலும், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வருவதற்கு அந்நாட்டு அரசாங்கம் பல நிதி உதவிகளை அளித்தது. அந்நாட்டின் ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கையை சிறப்பாக வகுத்திருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |