Categories
உலக செய்திகள்

வானில் பறந்து கொண்டிருந்த ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர்… எதிர்பாராமல் நடந்த விபரீதம்… பிரபல நாட்டில் கோர சம்பவம்..!!

நேற்று அபுதாபியில் வானில் பறந்து கொண்டிருந்த ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் ஒன்று திடீரென தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒரு மருத்துவர் உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

காவல்துறையினரின் மருத்துவ உதவிக்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டில் உள்ளது. மேலும் இந்த மருத்துவ ஹெலிகாப்டர்கள் மூலம் காவல்துறையினருக்கு உதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் இந்த ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்கள் மருத்துவ காரணங்களுக்காகவும் காவல்துறையினரை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்து செல்லவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று அபுதாபியில் வானில் பறந்து கொண்டிருந்த ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் ஒன்று எதிர்பாராதவிதமாக தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த ஒரு டாக்டர், ஒரு நர்ஸ், ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரை இயக்கிய 2 விமானிகள் உட்பட மொத்தம் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து அபுதாபி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |