மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஹௌரா என்ற மாவட்டத்தில் கொல்கத்தா மற்றும் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை பெண் ஒருவர் தனது பத்து வயது மகளுடன் பேருந்துக்காக காத்திருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த தாய் மற்றும் மகள் மீது பயங்கர வேகமாக மோதியது.அந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர் .
இந்த விபத்தை தொடர்ந்து அங்கு வந்த சிலர் விபத்துக்கு காரணமான ஆம்புலன்ஸ்க்கு தீ வைத்தனர். அதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.