அம்பேத்கார் பிறந்த நாளை பொதுமக்கள் வெளியே கொண்டாடக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வருகிறது. கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகரித்துள்ளது. நாளுக்குநாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்புகள் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மூன்றாவது மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. இந்நிலையில்க் கொரோனவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடு விதித்துள்ளது.
குறிப்பாக கொரோனவை கட்டுப்படுத்த சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் மத்திய மாநில அரசுக்கள் முழு ஊரடங்கை அமல் படுத்தியுள்ளது. ஏப்ரல் 14ம் தேதி சட்டமேதை அம்பேத்கர் பிறந்த நாளையும், ஏப்ரல் 17ஆம் தேதி சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளையும் ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த முறை கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நோக்குடன் பொதுமக்கள் கூடும் அனைத்து நிகழ்ச்சிகளும், விழாக்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் பொதுமக்களின் நலன் கருதிஏப்ரல் 14ம் தேதி டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளிலும், ஏப்ரல் 17-ம் தேதி சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாள் விழாவிலும் அரசு சார்பில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மட்டுமே மரியாதை செலுத்துவார்கள். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.