அமேசானில் அதிரடி சலுகையில் 190 க்கு லேப்டாப் ஆர்டர் செய்தவருக்கு மோசடி நடந்துள்ளது. இது நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு ஞாயம் கிடைத்துள்ளது.
190 ரூபாய்க்கு லேப்டாப் என்று கூறி சட்டக்கல்லூரி மாணவர் மோசடியால் பாதிக்கப்பட்டதாக வழக்கு ஒன்றை தொடர்ந்தார். ஒடிசா மாநில நுகர்வோர் நிவாரண ஆணையம் ரூபாய் 45 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஒரிசாவை சேர்ந்த சுப்ரியா ரஞ்சன் என்ற சட்டக்கல்லூரி மாணவர் கடந்த 2014 ஆம் ஆண்டு பிரபலமான அமேசானில் 190 அறிவிக்கப்பட்ட லேப்டாப்பை ஆர்டர் செய்தார். ஆடர் செய்து உறுதிப்படுத்தப்பட்ட சிலநிமிடத்தில் அதனை அமேசான் ரத்து செய்துவிட்டது.
இதைப் பார்த்து அதிர்ந்து போன அவர் கஸ்டமர் சர்வீசுக்கு போன் செய்து விசாரணை செய்தார். பலமுறை உரிய பதில் கிடைக்காத பட்சத்தில் தொழில்நுட்ப ரீதியில் கோளாறு காரணமாக விலையில் குழப்பம் ஏற்பட்டு உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். அதன் காரணமாக ரத்து செய்யப்பட்டதாகவும் விளக்கமளித்தனர். இதைத்தொடர்ந்து சட்டக்கல்லூரி மாணவர் சுப்ரியா மற்றொரு லேப்டாப்பை ஆர்டர் செய்துள்ளார் .
அதுவும் உரிய நேரத்தில் கிடைக்காத காரணத்தால் கல்லூரி பாடத்தை சமர்ப்பிக்க தாமதமாகியுள்ளது. இதனால் அந்த மாணவர் ஒரிசா மாநில நுகர்வோர் ஆணையத்திடம் முறையிட்டுள்ளார். சட்ட கல்லூரி மாணவரின் நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு தற்போது பலன் கிடைத்துள்ளது. நிதி மோசடி மற்றும் உளவியல் துன்புறுத்துவதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அமேசான் நிறுவனத்திற்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து இழப்பீடு தொகையாக அவருக்கு 40 ஆயிரம் மற்றும் கூடுதலாக வழக்கு செலவு மற்றும் வாடிக்கையாளர்களுக்காக ஐந்தாயிரம் ரூபாய் சேர்த்து 45 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.