Categories
பல்சுவை

“அன்பான மனைவி.. அழகான துணைவி” லதா ரஜினியின் அற்புத காதல் கதை….!!

சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருந்த ஒரு மிகப்பெரிய நடிகர் தன்னை பேட்டி எடுக்க வந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஒரு சுவாரசியமான கதை தான் இந்த செய்தி தொகுப்பு.

ரஜினி லதா இருவரது காதல் கதையில் நிறைய சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. ரஜினி லதா அவர்களுடைய காதல் பொதுவான காதல் கதை போன்றது அல்ல. கிட்டத்தட்ட இவர்களது காதல் கதையை திரைப்படமாக எடுத்தால் நன்கு ஓடும் என்றே கூறலாம். ஒரு நடிகன் ஒரு சாதாரண பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டால் எப்படி இருக்கும். எத்திராஜ் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து வந்த லதா ரங்காச்சாரி என்ற மாணவிக்கு கல்லூரி பத்திரிக்கைக்காக  அன்றைய முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை பேட்டி எடுத்து வரவேண்டும் என்ற வேலை கொடுக்கப்பட்டது.

அந்தப் பேட்டி எடுக்க சென்ற தருணம் தான் லதா ரங்காச்சாரி லதா ரஜினிகாந்த் ஆக மாற தொடக்கப் புள்ளியாக அமைந்தது. தில்லு முல்லு திரை பட ஷூட்டிங்கின் போது தான் ரஜினியும் லதாவும் முதன்முதலாக ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துக் கொண்டனர். பேட்டியின்போது லதாவை திருமணம் செய்து கொள்கிறாயா? என்று கேள்வி கேட்டு திணற வைத்தார் ரஜினி. லதா பெற்றோரிடம் கேட்டு சொல்வதாக கூறி சென்றார். கடந்த 2012 ஆம் ஆண்டு ஒரு பேட்டியில் ரஜினி தன்னிடம் ஒரு முறை கூட காதலிப்பதாக கூறவில்லை.

நேரில் பார்த்த பொழுது திருமணம் செய்துகொள்வோம் என்று கூறி விட்டு நகர்ந்து சென்றுவிட்டார் என்று குறிப்பிட்டு இருந்தார் லதா. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ரஜினியை அறிந்து கொள்ள ஆரம்பித்தார் லதா. இளம் வயதில் அம்மாவை இழந்தது  பல தடைகளை தாண்டி நடிகனாக வென்றது என ரஜினியை மொத்தமாக அறிந்து கொள்ள துவங்கினார் லதா. இந்நிலையில் ரஜினி நரம்பியல் பிரச்சினையில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த சமயம் அவருக்கு தாய்மை அன்பு தேவை என்பதை உணர்ந்தார் லதா.

ரஜினி நரம்பியல் பிரச்சினையிலிருந்து வெளிவந்தால் மொட்டை அடித்துக் கொள்கிறேன் என்று வேண்டிக் கொண்டாராம் லதா. அதேபோல ரஜினிக்கு சரியானதும் மொட்டை அடித்துக்கொண்டார். ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா மற்றும் முரளி பிரசாத் லதாவின் பெற்றோர்களை சந்தித்து திருமணத்துக்கு சம்மதம் வாங்கினர். 1978 முதல் 79 வரை என இரண்டு ஆண்டுகளில் தினமும் ஷூட்டிங் சென்று நடித்து வந்தார் ரஜினி. தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என பகலில் ஷூட்டிங் இரவில் பயணம் என ஓய்வின்றி நடித்ததுதான் ரஜினிக்கு நரம்பியல் பிரச்சினை ஏற்பட காரணம் ஆக இருந்தது என்று கூறப்படுகிறது.

அனைத்தும் சரியாக பிறகு 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி இருவரும் திருப்பதி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். ரஜினியின் ஆன்மிகம் மற்றும் திருமணத்திற்கு பிறகு ஏற்பட்ட நிறைய மாற்றங்களுக்கு லதா ரஜினியின் காதலும் அன்பும் தான் காரணம். அன்பான மனைவி இருந்தால் எந்த பிரச்சினையையும் எளிதாக கடந்து வரலாம் என்பதற்கு இந்த ஜோடி சிறந்த எடுத்துக்காட்டு.

Categories

Tech |