Categories
உலக செய்திகள்

114 மாலுமிகளுக்கு கொரோனா பாதிப்பு…. கடற்படை தலைவர் ராஜினாமா….!!

அமெரிக்க போர்க் கப்பலில் 114 மாலுமிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் கடற்படைத் தலைவர் தாமஸ் மோட்லி  ராஜினாமா செய்துள்ளார்.

அணுசக்தியில் இயங்கிவரும் அமெரிக்க விமானம் தாங்கி போர்க் கப்பலான தியோடர் ரூஸ்வெல்ட்டில்  பணியாற்றிவந்த 114 மாலுமிகள் கொரோனாவால் பாதித்திருப்பது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டு அந்தக் கப்பல் குவாம் தீவில் இருக்கும் கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டது.

கப்பலின் தலைமை அதிகாரியான குரோஷியர் ஊடகங்களுக்கு கடிதம் எழுதியதன் காரணமாகவே மாலுமிகள் கொரோனா தொற்றால் பாதித்திருப்பது வெளியுலகத்திற்கு தெரிய வந்துள்ளது. இதனால் பீதியை ஏற்படுத்தி பகிரங்கமாக உதவி கேட்டதாக குற்றம்சாட்டி குரோஷியரை கடற்படை தலைவர் தாமஸ் மோட்லி  பதவி நீக்கம் செய்துள்ளார்.

இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாலுமிகளின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு பதிலாக தலைமை அதிகாரியை பதவி நீக்கம் செய்தது தவறான செயல் என எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்துள்ளனர். மேலும் கடற்படைத் தலைவர் தாமஸ் பதவியை விட்டு விலக வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் தாமஸ் மோஸ்ட்லி தன் பதவியை நேற்று ராஜினாமா செய்து கடிதத்தை ராணுவ மந்திரி மார்க் எஸ்பரிடம் வழங்கியுள்ளார். இது தொடர்பாக மார்க் கூறுகையில், “ஜனாதிபதி டிரம்பின் ஒப்புதலோடு தாமஸின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது. அமெரிக்க இராணுவத்தின் மூத்த அதிகாரியான ஜிம் மெக்பர்சன் புதிய கடற்படை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்” எனக்கூறினார்.

Categories

Tech |