முக கவசம் அணிவதில்லை என சட்ட விரோதமாக பேசியதை அடுத்து அமைச்சர் செல்லூர் ராஜூ மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.
மதுரையில் இரண்டு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் திரு. செல்லூர் ராஜு கொரோனாவோடு வாழ பழகியதால் முக கவசம் அணியாமல் செய்தியாளரை சந்தித்து பேசுவதாக கூறினார். முக கவசம் அணியாமல் வெளியே வரும் மக்களுக்கு காவல்துறை அபராதம் விதிக்கும் நிலையில் அமைச்சரின் இந்த பொறுப்பற்ற பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் முக கவசம் அணிவதில்லை என சட்ட விரோதமாக பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் திரு. ராம சுப்பிரமணியன் என்பவர் முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமிக்கு புகார் அனுப்பியுள்ளார்.
முக கவசம் அணியாதவர்கள் மீது இதுவரை பல கோடி ரூபாய் அபராதத் தொகை வசூலித்த காவல் துறை அமைச்சர் செல்லூர் ராஜூக்கும் அபராதம் விதித்து அதனை வசூலிக்க வேண்டும் என தனது புகாரில் வழக்கறிஞர் திரு. ராம சுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார்.