முன்னால் காதலி தான் கர்ப்பமாக இருப்பது போல் காதலனை ஏமாற்றி வந்த சம்பவம் ஸ்காட்லாந்தில் அரங்கேறியுள்ளது.
கஹானி என்ற ஹிந்தி படத்தில் கர்ப்பிணி ஒருவர் தன் கணவனைத் தேடி லண்டனிலிருந்து கொல்கத்தாவிற்கு செல்வார். ஆனால் அப்பெண் கர்ப்பிணியை இல்லை என்பதும் செயற்கை வயிறு ஒன்றை வைத்து ஏமாற்றி வந்துள்ளார் என்பதும் தெரியவரும். படத்தில் வந்த சம்பவம் போல் ஸ்காட்லாந்தில் நடைபெற்றுள்ளது.
ஜாக்லின் என்ற 36 வயது பெண்ணுக்கும் ஜேமி ஐட்கன் என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் கடந்த 2019ஆம் ஆண்டு பிரிந்துவிட்டனர். ஆனால் ஜாக்லின் தான் கர்ப்பமாக இருப்பதாக சொல்லி குடும்பத்தாரையும்,பிரிந்த காதலனையும் ஏமாற்றி வந்துள்ளார். அதுமட்டுமின்றி குழந்தைகளுக்கு பொருட்கள் வாங்குவதற்காக ஜேமி ஐட்கனையும் ஏமாற்றி பணமும் கேட்டுள்ளார்.
அவர் கர்ப்பமாக இருப்பது போல் காட்டுவதற்கு செயற்கையாக கர்ப்பிணி வயிறு போல் அமைத்துக்கொண்டார். இதேபோல் 9 மாதங்களாக குடும்பத்தாரையும், காதலனையும் ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவர் கர்ப்பமாக இல்லை என்பதும் செயற்கை வயிற்றை காட்டி ஏமாற்றி வந்ததும் அம்பலமானது. ஆகையால் உண்மையை ஒப்புக் கொண்ட ஜாக்லினுக்கான தண்டனை விவரம் அடுத்த மாதம் தெரியவரும்.