Categories
சினிமா தமிழ் சினிமா

அழுது புலம்புகிறார்கள்…. ஏ.ஆர். ரஹ்மான் வேதனை…!!

கொரோனா ஊரடங்கின் துயரத்தால் அழுது புலம்புகின்ற மக்களின் குரல் என ஏ.ஆர்.ரகுமான் வேதனையாக கூறியுள்ளார்.

கொரோனா ஊரடங்கின் காரணமாக பல திரை பிரபலங்களிடம் நடிகை குல் பனாக் பேட்டிகள் பல எடுத்து அதை வீடியோவாக வெளியிட்டு கொண்டிருக்கிறார். இதில் இசையமைப்பாளர்  ஏ.ஆர்.ரகுமானும் பேட்டி ஒன்று அளித்தார்.

அந்த பேட்டியில் அவர் கூறியது என்னவென்றால்; 

நான் யாருக்கும் அறிவுரைகள் வழங்குவது இல்லை. யாரும் அறிவுரை வழங்கினால் கேட்டுக்கொள்வேன். ஆனால் தற்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் அனைவருக்கும் மனம் என்னும் ஆத்மாவில் இரக்க குணம் இருப்பது அவசியம். அதனால் ஊரடங்கால் தவிக்கும் மக்களுக்கு உதவுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும். நாம் வெளியில் இருந்து பார்க்கும்பொழுது அமைதியான நிலையில் இருப்பது போன்று தோன்றலாம்.

ஆனால் பல லட்சக்கணக்கான மக்கள் உள்ளே அழுது புலம்புகிறார்கள். இம்மாதிரியானவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகள் என வழங்க வேண்டும். அரசு அறிவுறுத்தும் நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும். அனைவரின் பாதுகாப்பிற்காக மக்கள் வீட்டிற்குள்ளும் இருக்க வேண்டும். இதனால் இந்த துயரத்தில் இருந்து சீக்கிரம் மீள்வதற்கு அனைத்து உயிர்களும் இறைவனை மனதார பிராத்திப்போம்.

இதிலிருந்து நகரங்களை எவ்வாறு வைத்து கொள்வதென்று நாமும் ஒரு பாடத்தை கற்று கொண்டிருப்போம். இந்த சூழலில் சென்னையில் நான் ஆகாயத்தை இத்தனையொரு தெளிவாகவும், அழகாகவும் பார்த்ததில்லை. அதனால் அதை என் ஞாபகத்தில் வைத்து கொள்வதற்கு புகைப்படம் ஒன்று எடுத்து கொண்டேன். இவ்வாறு அவர் பேட்டியில் கூறியிருந்தார்.

 

Categories

Tech |