Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அழுது கொண்டே எழுப்பிய குழந்தைகள்… தாய் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

இளம் பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள கே. ஆர். தோப்பூர் பகுதியில் டிரைவரான வைரமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வித்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 1 பெண் குழந்தையும், 2 ஆண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் வித்யா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வாயில் நுரை தள்ளிய படி மயங்கி கீழே விழுந்து கிடந்துள்ளார். இதனைப் பார்த்த வித்யாவின் குழந்தைகள் அம்மா எழுந்திரு என்று நீண்ட நேரமாக எழுப்பியும் அவர் எழும்பாததால் அழுது கொண்டே அருகில் இருக்கும் உறவினர்களிடம் கூறியுள்ளனர். இதனைக்கேட்ட உறவினர்கள் உடனடியாக வித்யாவின் வீட்டிற்குச் சென்று மயங்கிய கீழே விழுந்து கிடந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால் அங்கு வித்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று  தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த வித்யாவின் தாயான பழனியம்மாள் என்பவர் தனது மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளது என காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று வித்தியாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் நடத்திய விசாரணையில் வித்யாவின் கணவரான வைரமுத்துவின் மாமன் மகள் தனது கணவரை பிரிந்து தற்போது தாய் வீட்டில் வசித்து வருகின்றார்.

இதனையடுத்து வைரமுத்துவிற்கும்  அவரின் மாமன் மகளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த வைரமுத்துவின் மனைவியான வித்யா தனது கணவரை கண்டித்துள்ளார். ஆனால் அதனை வைரமுத்து ஏற்காமல் மீண்டும் அவரின் மாமன் மகளுடன் பழகி வந்துள்ளார். இதனால் வித்யா மிகுந்த மனவேதனையுடன் இருந்துள்ளார். இந்நிலையில் தான் வித்யா வாயில் நுரை தள்ளிய படி தற்கொலை செய்து கொண்டார் என்று காவல்துறையினருக்கு தெரியவந்ததுள்ளது. அதன்பிறகு காவல்துறையினர் வித்யாவின் உடற்கூறு ஆய்வு அறிக்கை வெளிவந்த பிறகு அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தெரிய வரும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வித்தியாவின் கணவரான வைரமுத்து மற்றும் அவரின் மாமன் மகளை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |