Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சிறுபான்மையர் கருத்து கேட்பு…. நிபுணர்களுடன் நடைபெற்ற கூட்டம்…. ஆணையத் தலைவரின் செயல்….!!

முதலமைச்சர் சிறுபான்மையினர்களின் உரிமைகளை பாதிக்கின்ற எந்த திட்டங்களையும் அனுமதி வழங்கமாட்டார் என பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் சிறுபான்மையினரின் மேம்பாட்டுக்கான கருத்து கேட்பு மற்றும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சிறுபான்மை மக்களின் வாழ்வியல் பிரச்சனைகள், கோரிக்கைகள் ஆகியவற்றை அரசாங்கத்திற்கு தெரிவிப்பதற்கும் மற்றும்  அரசாங்கத்தால் செயல்படுத்தி வரும் திட்டங்கள் மக்களிடம் சென்றடைகிறதா என்பதை கண்டறிவதற்கும் இந்த ஆணையத்தின் செயல்பாடாகும் என ஆணைய தலைவர் நிபுணரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து முதலமைச்சர் எந்த ஒரு நேரத்திலும் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய எந்த திட்டத்தையும் செயல்படுத்த அனுமதிக்க மாட்டார் எனவும், அதனால் அவருக்கு நாம் எல்லோரும் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம் என அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அறநிலையத்துறையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை அனைத்து மதத்தினரும் பாராட்டி வருகின்றனர். அதனால் நாம் எந்த மதம் என்பதை விட எல்லோரும் தமிழன் என்று அடையாளம் காண்போம் மற்றும் தமிழர்கள் ஒற்றுமையுடன் இருப்போம் எனவும் தமிழர்களாக எழுந்து நிற்போம் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |