Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கிளினிக்குகளில் திடீர் சோதனை…. சிக்கிய ஆயுர்வேத மருத்துவர்…. அதிகாரிகளின் நடவடிக்கை….!!

அலோபதி முறையில் சிகிச்சை அளித்த கிளினிக்குக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்திலுள்ள ஊசூரில் ஆயுர்வேதம் யுனானி மருத்துவம் பயின்று விட்டு அலோபதி முறையில் சிகிச்சை அளிப்பதாக மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் யாஸ்மினுக்கு புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின்படி அணைக்கட்டு மருத்துவ அலுவலர், மருந்துக்கட்டுப்பாட்டு அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அரியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மன் போன்றோர் அந்தப் பகுதியில் உள்ள கிளினிக்குகளில் திடீர் சோதனை  மேற்கொண்டனர்.

அங்கு ஒரு கிளினிக்கில் அதிகாரிகள் சோதனை செய்ததில் ஆயுர்வேதம் மருத்துவத்திற்கு பயின்று விட்டு அலோபதி முறைகளில் சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர் தொரப்பாடி பகுதியில் வசிக்கும் விஜயராஜ் என்பவர் தெரிந்தது. இதனையடுத்து அந்த கிளினிக்கை வருவாய்த்துறையினர் அடைத்து சீல் வைத்தனர். இவ்வாறு ஆயுர்வேத முறையில் மக்களுக்கு சிகிச்சை அளித்தது குறித்த விஜயராஜியிடம் விசாரணை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |