அனைத்து வயதினரும் விரும்பும் வகையில் சுவையான சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ்.
தேவையான பொருட்கள்:
- வெங்காயம்-1
- தக்காளி-1
- இஞ்சி ஒரு துண்டு
- பச்சை மிளகாய்-2
- வேகவைத்த உருளைக்கிழங்கு 2
- மல்லித் தூள் அரை ஸ்பூன்
- மிளகு தூள் அரை ஸ்பூன்
- தக்காளி சாஸ் ஒரு டேபிள் ஸ்பூன்
- சாட் மசாலா அரை தேக்கரண்டி
- கொத்தமல்லி இலை மற்றும் உப்பு தேவையான அளவு
செய்முறை:
வேகவைத்த உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், இஞ்சி, தக்காளி, பச்சைமிளகாய், கொத்தமல்லி இலைகளையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி சேர்த்து நன்றாக வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து வேகவிடவும்.
இதனுடன் நறுக்கிய பச்சைமிளகாய் மற்றும் மல்லித் தூள், மிளகுத் தூள், வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து கிளறவும். அதன்பின் சாட் மசாலா, தக்காளி சாஸ் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவைக்கவும். இறுதியாக கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான ஆலு சாட் ரெடி…!