Categories
தேசிய செய்திகள்

தனியாக இருக்கும் முதியவர்களுக்கு…. உதவிக்கரம் நீட்டும் சென்னை காவல்துறை….!!

கொரோனா தொற்று காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் முதியவர்களுக்கு உதவும் வகையில் புதிய நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அது மட்டுமில்லாமல் பல மருத்துவமனைகளில் இடம் இல்லாத காரணத்தினால் நோய்த்தொற்று உறுதியான பலரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும் படி மருத்துவமனை தெரிவிக்கின்றது. இதனால் பலர் தங்களது வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு இருந்து வருகின்றனர்.

இதையடுத்து அவர்களுக்கு உதவும் வகையில் தனி கட்டுப்பாட்டு அறை ஒன்றை உருவாக்கி அதில் தனியாக வசிக்கும் முதியவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவி செய்யும் பணிகளை காவல்துறை மேற்கொண்டு வருகின்றது. அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது, உணவு வழங்குவது, தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பது போன்ற உதவிகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர 044- 23452221 என்ற காவல்துறை உதவி எண்ணை தொடர்பு கொண்டு உதவி கேட்பவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து வருகின்றனர். மக்களை கட்டுப்படுத்துவதை மட்டும் பணியாக கொள்ளாமல் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் காவல்துறை செய்து வருவது பாராட்டுக்குரியது.

Categories

Tech |