Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவைத்து பாருங்கள்… அனைவரும் விரும்பிடும் பாதம் பாயாசம்…!!

ஆரோக்யம் நிறைத்த பாதம் கொண்டு பாயாசம் செய்வது பற்றி இந்த தொகுப்பு

தேவையான பொருட்கள்

பாதம்                        –      100 கிராம்

சர்க்கரை                 –     2 கப்

ஏலக்காய்                –      14

முந்திரி                    –     12

பால்                           –     6 கப்

நெய்                           –     6 டீஸ்பூன்

பிஸ்தா                     –     2 டேபிள்ஸ்பூன்

குங்குமப்பூ              –     தேவையான அளவு

செய்முறை

முதலில் முந்திரியை சிறிய துண்டுகளாக உடைத்து பிஸ்தாவுடன் சேர்த்து நெய்யில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து அதில் பாதாமை போட்டு ஒரு மணிநேரம் ஊறவைத்து பின்னர் தோலை   உரித்து எடுக்கவும்.

தோலுரித்த பாதாமை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்து வைத்த பாதாமை 4 கப் தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும் கொதிக்கும் பொழுது அவ்வப்பொழுது கிளறி விடவும்.

பச்சை வாசனை போனதும் சர்க்கரையை சேர்க்கவும். சர்க்கரை நன்றாக கரைந்த பின்னர் பாலை ஊற்றி விட்டு எல்லா பொருட்களையும் அதனுடன் சேர்த்து கொதித்த உடன் இறக்கிவிடலாம்.

இறுதியாக நெய், ஏலக்காய்  மற்றும் குங்குமப்பூவை சேர்த்தால் சுவையான பாதாம் பருப்பு பாயசம் ரெடி.

Categories

Tech |