‘புஷ்பா’ படம் இதுவரை செய்த அசத்தலான வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் ”புஷ்பா”. சந்தன கடத்தல் குறித்து பேசும் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் சாமி சாமி, ஓ சொல்றியா மாமா போன்ற பாடல்கள் செம ஹிட் அடித்தது.
தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இந்த படத்தின் இரண்டாம் பாகம் மார்ச் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படம் இதுவரை செய்த அசத்தலான வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.