தமிழக்கத்தில் விவசாய பொருட்களுக்கான தடையை நீக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக பல்வேறு தொழிலுக்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. மளிகை கடைகள்,இறைச்சி கடைகள், மருந்தகங்கள் போன்றவற்றை திறக்க கூடாது என்பதற்கான தடை இல்லை, ஆனால் நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. மருந்தகங்களுக்கு மட்டும் நேரக் கட்டுப்பாடு என்பது கிடையாது.
இந்நிலையில் விவசாய பொருட்களை கொள்முதல் செய்வதற்கான தடை நீக்கப்பட்டிருக்கிறது. விவசாய பொருட்கள் கொள்முதல், நிறுவனங்கள், விவசாய விளைபொருட்கள் மார்க்கெட்டில் விற்பனை செய்யும் நிலையங்கள், விவசாய பணிகள் மற்றும் விவசாயக் கூலி பணி, விவசாய இயந்திரங்கள், வாகனங்கள், போன்றவற்றுக்கு தற்போது தடை நீக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல மாநிலங்களுக்கிடையேயான விவசாய மற்றும் தோட்டக்கலை சார்ந்த இயந்திரங்களை இயக்கத்திற்கான தடை நீக்கப்பட்டிருக்கிறது. உரம், விதைகள், பூச்சி கொல்லி மருந்து தயாரிப்பு மற்றும் பேக்கிங் நிறுவனங்கள், விவசாய இயந்திரங்கள் வாடகை மையங்கள் போன்றவற்றிற்கு தடை நீக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.கொள்முதல் பாதிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியதன் அடிப்படையில் தற்போது தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறது.