Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

திருப்பதி கோவிலில் மக்களுக்கு அனுமதி ….! ஆந்திர அரசு அதிரடி அறிவிப்பு …!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் மக்களை தரிசிக்க தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது.

பொது முடக்கத்தால் வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் வழிபாட்டுத்தலங்கள் எப்போது திறக்கப்படும் என்று எதிர்பார்த்து பக்தர்கள் காத்திருந்தனர். குறிப்பாக திருப்பதி கோவிலில் பக்தர்கள் எப்போது அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் இருந்த நிலையில் தனிநபர் இடைவெளியுடன் பக்தர்கள் அனுமதிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. கொரோனா ஊரடங்கால் திருப்பதி கோவிலில்  பக்தர்களுக்கு அனுமதி வழங்காமல்  பிரசாதங்கள் மட்டும் வழங்கப்பட்டு வந்தன.

tirupati vip darshan: திருப்பதி ஏழுமலையான் ...

இந்த நிலையில் உள்ளோர் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி தர திருமலை திருப்பதி தேவஸ்தானம் தற்போது முடிவெடுத்திருக்கிறது. இதனை ஒரு சோதனை முயற்சியாக செய்து பார்க்கலாம் என்று தேவஸ்தான முடிவெடுத்திருக்கிறது. அதேபோல வரக்கூடிய பக்தர்கள் தனிநபர் இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.  6 அடி இடைவெளி உடன் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என்று ஆந்திர அரசு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

Categories

Tech |