Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

சினிமா போஸ்ட் ப்ரொடக்சன் பணிகளை தொடங்க அனுமதி… மகிழ்ச்சியில் தயாரிப்பாளர்கள்!!

சினிமா, சீரியல்களின் படத்தொகுப்பு, குரல்பதிவு உள்ளிட்ட தயரிப்புக்குப் பிந்தைய பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தயாரிப்புக்கு பிந்தைய பணிகளை மட்டும் மே 11ம் தேதி முதல் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்துள்ளார் என அரசு தகவல் வெளியாகியுள்ளது. படத்தொகுப்பு, குரல் பதிவு, பின்னணி இசை, ஒலிக்கலவை ஆகிய பணிகளில் அதிகபட்சம் 5 பேர் மட்டும் ஈடுபடலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. கிராபிக்ஸ் பணிகளை மட்டும் 10 முதல் 15 பேரை வைத்து மேற்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் கடந்த மே 4ம் தேதி முதல் தொடங்கப்பட்டன. இந்த நிலையில், சினிமா சம்மந்தப்பட்ட பணிகளை மேற்கொள்ள தயாரிப்பாளர்கள் சார்பில் அனுமதி கோரப்பட்டது. அதேபோல, சின்னத்திரை படப்பிடிப்புகளை மீண்டும் தொடங்க அனுமதி வழங்கக்கோரி, சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் நடிகையுமான குஷ்பு தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து பேசிய பின்னர், செய்தியாளர்களுக்குப் பேட்டிளித்த நடிகை குஷ்பு, சின்னத்திரையில் வெளி ஊர்களுக்கு சென்று படப்பிடிப்பு இருக்காது என்பதால், தொழிலாளர்களின் நலனுக்காக படப்பிடிப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவித்தார். இந்த நிலையில், சினிமாத்துறைகளில் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |