Categories
மாநில செய்திகள்

ரூ.1,600,00,00,000 ஒதுக்கீடு…! டெண்டர் விட போறோம்… வேகம் காட்டும் தமிழக அரசு..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, 2021மே மாதம் 7ஆம் தேதி தமிழகத்தினுடைய முதலமைச்சராக மாண்புமிகு தளபதி அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, ஆய்வு செய்யப்பட்டதில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் ?

என்னென்ன சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் ? என்று ஒவ்வொரு வகையாக கணக்கிட்டு,  அதற்கான முயற்சிகளில் மேற்கொள்ளப்பட்டு தான், இந்த சிறப்பு பராமரிப்பு பணிகள் செய்தது… அதேபோல புதிய மின் மாற்றிகள், 316 துணை மின் நிலையங்கள். இது எதற்கு என்றால் நாம் உற்பத்தி ஒரு பக்கம் அதிகரித்தால் கூட,

விநியோகத்திற்கான வேலைகள் நாம் செய்தால் மட்டும் தான் சீரான விநியோகத்தை செய்ய முடியும். இல்லையென்றால் உற்பத்தி செய்து விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும்.நம்முடைய மின் இணைப்பு அதிகரிக்கின்ற போது விநியோகத்திற்கான கட்டமைப்பை வலுப்படுத்த 316 துணை மின் நிலையங்கள். அந்த பணிகளோடு சேர்த்தீர்கள் என்றால்….

புதிதாக வரக்கூடிய இடங்கள்…  கடலோர மாவட்டங்கள் மட்டுமல்ல, சென்னையில் யூஜி கேபிள் போடுகிறோம். இன்னும் 7 டிவிஷனில் போட வேண்டியது இருக்கிறது, அதற்கு 1,600 கோடி அளவிற்கு திட்டமிட்டு  தயார் செய்யப்பட்டு, டெண்டர் விடப்பட உள்ளது. டெண்டர் நாங்கள் நிர்ணயம் பண்றது இல்ல. அதற்கான போர்டு இருக்கிறது.

டெண்டருக்கு என்னென்ன விதிமுறைகளை கொண்டு வர வேண்டும், ஏற்கனவே என்னவெல்லாம் இருக்கிறது ? என்னென்ன கண்டிஷன் கொண்டுவர வேண்டும் என்று போர்டு தான் முடிவு செய்கிறார்கள். அதற்கான அதிகாரிகள் தான் முடிவு செய்கிறார்கள்.

மற்ற மாநிலங்களில் இருக்கக்கூடிய விதிமுறைகளை எடுத்து பார்த்துவிட்டு டெண்டர்  கண்டிஷன் என்பது ஒரே கண்டிஷன் தான், ஒரே மாதிரி தான் இருக்கும். மற்ற மாநிலங்களில் என்ன இருக்கிறதோ, அதே தான் இங்கேயும் பின்பற்ற போகிறோம் என தெரிவித்தார்.

Categories

Tech |