வரும் 2021 சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணி மக்களுடன்தான் என அக்கட்சி மாவட்ட செயலாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
வரும் 2021 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் இன்று (நவ. 2) சென்னையில் நடைபெற்றது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் இன்று (நவ. 2) அக்கட்சி தலைவர் உரையாற்றியுள்ளார்.
இந்நிலையில் அது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கூட்டணி என்பது என் வேலை. வெற்றிக்கு எல்லோரும் உழைக்க வேண்டும். நம் கூட்டணி மக்களுடன்தான் எனக் குறிப்பிட்டார்” எனக் குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து தொண்டர்கள் ட்விட்டரில் #KamalHaasan என்ற ஹேஷ்டக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.