Categories
அரசியல் மாநில செய்திகள்

PMK தலைமையில் கூட்டணி.. EPS யின் மெகா கூட்டணிக்கு….. ஆப்பு வைத்த அன்புமணி ராமதாஸ் ..!

செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,  வளர்ச்சி என்பது நல்ல கல்வியை கொடுக்க வேண்டும். சுகாதாரம், விவசாயம் நன்றாக இருக்கனும். நல்ல சுற்றுச்சூழல் கொடுங்கள், வளர்ச்சி திட்டங்களை கொடுங்கள், அந்த கண்ணோட்டத்தில் பாருங்கள். நீர் மேலாண்மை எவ்வளவோ பிரச்சனை. இப்போது இருக்கின்ற பிரச்சனை தமிழ்நாட்டில் பிரச்சனை, இந்தியாவில் பிரச்சனை, உலகத்தின் பிரச்சனை வந்து சுற்றுச்சூழல் மாற்றம்.

அதைப் பற்றி யாராவது பேசுகிறீர்களா ? எங்கேயாவது விவாதம் நடக்கிறதா? இல்லையே. இதுதான் பிரச்சினையே இன்றைக்கு மட்டுமல்ல, அடுத்த தலைமுறை, அதற்கு அடுத்த தலைமுறை, நான்கு, ஐந்து தலைமுறைக்கு பிரச்சனை இதுதான். இதில் என்ன என்றால் ? நம்ம தலைமுறையில் தான் இதற்கு தீர்வு கொண்டு வர முடியும். அடுத்த தலைமுறைக்கு இந்த தீர்வு கொண்டு வந்து விட்டுட்டோம் என்றால் ரொம்ப தாமதமாகிவிடும். அதைப் பற்றி யாருமே பேச மாட்டார்கள்.

நீங்க பாக்கத்தான் போறீங்க ? 2026-இல் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் நாங்கள் ஆட்சி அமைப்போம், அதற்கு ஏற்ப வியூகங்களை நாங்கள் 2024-ல் அமைப்போம். பாமக தலைமையில் ஆட்சி அமைப்போம் என சொல்கின்றோம், அதிமுகவின் மெகா கூட்டணியில் பாமக இருக்குமா ? இல்லையானு கேட்குறீங்க ? காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி அமைதியாக நல்லபடியாக நடத்தி இருந்தால் நல்லா இருந்திருக்கும். நிறைய விளம்பரப்படுத்தி, இன்னும் கொஞ்சம் விளம்பரம் குறைத்து இருக்கலாம் என தெரிவித்தார்.

Categories

Tech |